தர்மபுரம் பங்கின் எல்லைக்குட்பட்ட பிரமந்தனாறு புன்னைநீராவி பிரதேசத்தில் இயங்கிவரும் ஆங்கிலக் கல்வி வளாகம் மெல்லக் கற்கும் மாணவர்களின் ஆங்கில மொழி வளர்ச்சியை நோக்காகக் கொண்டு பல விதமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அவற்றுள் க.பொ.தா சாதரண தர பரீட்சைக்கு மானவர்களை தயார்ப்படுத்தல் இதற்கு துணையாக தரம் 6 முதல் தரம் 11 வரையான மாணவர்களுக்கு பாடசாலை தவிர்ந்த நேரங்களில் விசேட வகுப்புகளை நடாத்துதல் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்களை தேவையான இடங்களில் ஒழுங்குபடுத்தல் போன்றன முக்கியமானவைளாகும். இதன் ஒரு செயற்பாடாக 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தரம் 10, 11 மாணவர்களுக்கான விசேட ஆங்கில வகுப்புக்கள் இவ்வளாக இயக்குனர் அருட்திரு எடவின் சவுந்தரா அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றுள்ளது.