பாசையூர் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1ஆம் திகதி புனிதரின் கொடி ஏற்றிவைக்கப்பட்டு 4ஆம் திகதி ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 12ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணை விழா இடம்பெற்றது. நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்களும் திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர்அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
இத்திருப்பலியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியதுடன் அன்று மாலை புனிதரின் திருச்சொருப தேர்ப்பவனியும் தொடர்ந்து ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin