பலவான் இயேசுவே திருவழிபாட்டு பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு 26 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலா மன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கையில் அமலமரித்தியாகிகள் பிரசன்னத்தின் 175வது ஜீபிலி ஆண்டில் யாழ்.மாகாண அமலமரிதியாகிகள் சபையை சேர்ந்த அருட்திரு யூட் கறோவ் அவர்களின் முயற்சியில் உருவான பாடல்களே இவ் இறுவட்டில் வெளிவந்துள்ளது. இவ் வெளியீட்டு விழாவில் பிரதமவிருந்தினராக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களும் சிறப்பு விருந்தினராக அமலமரித்தியாகிகளின் யாழ். மாகாண முதல்வர் அருட்திரு இயூயின் பெனடிற் அவர்களும் கௌரவ விருந்தினராக செபமாலைத் தாசர் சபையை இலங்கை மாகாண முதல்வர் அருட்திரு பிரான்சிஸ் ஜெயசீலன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

By admin