நெடுந்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலய வருடாந்த திருவிழா 24ஆம் திகதி சனிக்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திருவிழாத் திருப்பலியை மட்டக்களப்பு மறைமாவட்டத்ததைச் சேர்ந்த அருட்தந்தை நவாஜி அவர்கள் தலைமை தாங்கி நிறைவேற்றினார். 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் நற்கருணை விழாத் திருப்பலியை அருட்தந்தை சோபன்றூபஸ் அவர்கள் தலைமை தாங்கி நிறைவேற்றினார்.
திருவிழா அன்று மாலை புனிதரின் திருச்சுருப பவனியும் ஆசிரும் நடைபெற்றது.

By admin