அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அமைதி தென்றல் நிறுவன இயக்குனர் அருட்திரு அன்ரனி பொன்சியன் அவர்கள் எழுதிய “நல்லாசிரியர் ஆன்மீகமும் ஆளுமையும்” எனும் நூல்வெளியீடு கடந்த 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவில் அமைந்துள்ள அமைதி தென்றல் நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தது நூலினை வெளியிட்டுவைத்தார். சிறப்பு விருந்தினராக யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக வடமாகாண அமலமரித்தியாகிகள் சபை முதல்வரும் மற்றும் கல்விசார் அதிகாரிகளும் கலந்து சிறப்பித்தனர். கோவிட்-19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

By admin