தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு வலைப்பாடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி 24 ஆம் வரை நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரிகள் மற்றும் மறையாசிரியர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வுகளில் மாணவர்களின் சந்தை நிகழ்வு, விளையாட்டு நிகழ்வுகள், சிறப்பு திருப்பலி என்பவற்றுடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
சிறப்பு திருப்பலியை யாழ். பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.