தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை பங்கில் முன்னெடுக்கபட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த வராம் அங்கு நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின்வழிநடத்தலில் புனித ஜோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் 06ஆம் திகதி புதன்கிழமை புனித பரலோக அன்னை ஆலய வளாகத்தில் சிரமதான பணியும்இ 10ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஊர்காவற்றுறை புனித பரலோக அன்னை ஆலய முன்றலில் நடைபெற்ற கலை நிகழ்வில் கவிதை பாட்டு நகைச்சுவை விடுகதை உள்ளிட்ட போட்டிகளுடன் தீப்பாசறையும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் ஊர்காவற்றுறை திருக்குடும்ப கன்னியர்மட முதல்வி அருட்சகோதரி தயாநாயகி அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

By admin