தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் திருவிழிப்பு ஆராதனை வருகின்ற 27ஆம் திகதி சனிக்கிழமை யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மைதானத்தில் நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை அதிகாலைவரை நடைபெறவுள்ள இத்திருவிழிப்பு ஆராதனையில் சிறப்பாக உலகெங்கும் நடைபெற்றுவரும் குழப்பங்கள் அகன்று இறையாட்சி மலர தூய ஆவியாரின் அருட்பொழிவு வேண்டி அனைவரும் ஒன்றுகூடி செபிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

By admin