தூய ஆவியார் பெருவிழாவை முன்னிட்டு யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் திருவிழிப்பு ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ். மறைமாவட்ட இறைதியான குழுவினரின் ஒழுங்குபடுத்தலில் யாழ். புனித மரியன்னை பேராலயத்திலும் திருவிழிப்பு ஆராதனை நடைபெற்றது.

18ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இடம்பெற்ற இத்திருவிழிப்பு ஆராதனையில் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் வெவ்வேறு துறவற சபையினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் வழிபாடுகளை முன்னெடுத்தனர்.

சனிக்கிழமை மாலை புனித மடுத்தீனார் சிறிய குருமட வளாகத்தில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் தலைமையில் திருவிழிப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து அதிகாலை 3 மணி வரை புனித மரியன்னை பேராலயத்தில் ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டு 3 மணிக்கு நற்கருணை ஆராதனையும் 4 மணிக்கு தூய ஆவியார் திருவிழா திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருவிழா திருப்பலியை யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். இத்திருவிழிப்பு ஆராதனையில் ஏராளமான மக்கள் பக்தியுடன் பங்குபற்றினார்கள்.

By admin