வடக்கு கிழக்கு ஆயர்கள் மாமன்றத்தின் அமைதி ஆய்வு நிறுவனம் அமைதி நல்லிணக்கம் மற்றும் வன்முறைகளற்ற பண்பாட்டை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு திறந்த ஓவியப் போட்டி ஓன்றை நடாத்த ஏற்பாடுகள் செய்துள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் படைப்பாளிகள் பிறிஸ்டல் போட் அளவில் கருப்பொருளின் செய்தியை வெளிப்படுத்தும் விதமாக வன்முறையை பிரிவினையை தூண்டும் அம்சங்களை தவிர்த்து புத்தாக்க ஓவியங்களாக வரையப்பட்டு படைப்பாளர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப வர்ணப் பிரயோகங்கள் மேற்கொண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்hதாக அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். சிறந்த ஓவியங்களுக்கு சான்றிதழும் பணப்பரிசில்களும் வழங்கப்பட உள்ளதுடன் ஓவியங்கள் அனைத்தும் நிரந்தரமாக அமைதி ஆய்வு நிறுவனத்தின் ஓவியக் கூடத்தில் காட்சிப்படுத்தப்படும் எனவும் ஓவியப் போட்டி இணைப்பாளர் அருட்திரு ஜெறோ செல்வநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

By admin