யாழ் மற்றும் மன்னார் மறைமாவட்டங்களைச் சேர்ந்த திருப்பாலத்துவசபை ஊக்குவிப்பாளர்களுக்கான வதிவிடப் பயிற்சியும், சின்னம் சூட்டும் விழாவும் கடந்த 13ம் திகதி சிலாபம் மறைமாவட்டதின் மாதம்பேயில் அமைந்துள்ள தியான இல்லத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சி நெறியில் கருத்துரைகள், தியானங்கள், திருப்பலி, களப்பயிற்சிகள் என்பன இடம்பெற்றன. இப்பயிற்சி நெறியின் இறுதி நாள் சின்னம் சூட்டும் நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்ணாண்டோ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்து திருப்பலி ஒப்புக்கொடுத்தது சிறுவர்களை இறை விசுவாசத்தில் வளர்ப்பது காலத்தின் தேவையாகும் எனபதனை வலியுறுத்தி இப்பணியை நிறைவேற்ற ஊக்குவிப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். யாழ் மற்றும் மன்னார் மறைமாவட்டங்களை சேர்ந்த 90 ஊக்குவிப்பாளர்கள் பங்கேற்ற இப்பயிற்சி நெறியினை திருத்தந்தையின் மறைபரப்பு சபைகளின் தேசிய இயக்குநர் பசிஸ் றொகான் அவர்களுடன் யாழ் மறைமாவட்ட இயக்குநர் அருட்திரு றொஸான் அவர்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தனர்.

By admin