தாளையடி பங்கின் குடாரப்பு பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித கார்மேல் அன்னை ஆலயத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவ் ஆலய திறப்புவிழா 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அழகிய தோற்றத்துடன் அமையப்பெற்ற புதிய ஆலயத்தை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அவரகள் ஆசீர்வதித்து திறந்துவைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
இத்திருப்பலியில் தாளையடி பங்கைச் சேர்ந்த 115 பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. பருத்தித்துறை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பெனட் அவர்களும் அவர்களுடன் இணைந்து ஏனைய குருக்களும் அருட்சகோதரிகளும் இறைமக்களும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார்கள்.
போதிய வசதிகளற்ற இப்பிரதேசத்தில் இவ்ஆலயம் அமையப்பெற இனம், மதம் கடந்து நிறைவான பல உதவிகளை செய்தவர்களுக்கு நினைவு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

By admin