தர்மபுரம் பங்கிலுள்ள பெரியகுளம் புனித செபஸ்ரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவிழாத் திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்தந்தை போல் நட்சத்திரம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். 05ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் 08ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது.
 
நற்கருணைவிழா திருப்பலியை வட்டக்கச்சி பங்குத்தந்தை அருட்தந்தை அஜித் சுலக்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin