மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் சிங்கள புத்தாண்டு சிறப்பு நிகழ்வு கடந்த 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் நடைபெற்றது.
வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் பரந்தன், சிவபுரம் பகுதியைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து நடைபெற்ற இந்நிகழ்வில்கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை சகாயநாயகம் அவர்களும் மகேஸ்வர குருக்கள் அவர்களும் கிராம உத்தியோகத்தர், மாயவனூர் சமூக மட்ட அமைப்பினர் மற்றும் உருத்திரபுரம், கல்மடுநகர் இளையோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இச்சிறப்பு நிகழ்வில் கலச்சாரம் பண்பாட்டை சித்தரிக்கும் போட்டி நிகழ்வுகளும் கலைநிகழ்வுகளும் அங்கு நடைபெற்றன.

By admin