ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தின் ஒழுங்குபடுத்தலில் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க மக்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட தடகள விளையாட்டு போட்டி கடந்த யூன் மாதம் 29ஆம் திகதி சனிக்கிழமை ஜேர்மன் கஸ்றொப் றவ்ட்சல் எனும் இடத்தில் நடைபெற்றது.

ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியக இயக்குனர் அருட்தந்தை நிருபன் நிசனாந் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பணியக கொடி ஏற்றிவைக்கப்பட்டு விளையாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

ஜேர்மன்வாழ் தமிழ் இளையோர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் பணியக மக்களின் தோழமை உறவை மேம்படுத்தல் என்பவற்றை நோக்காகக்கொண்டு முதல் முறையாக இவ்விளையாட்டு போட்டி முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் ஜேர்மன் நாட்டின் பல்வேறு பணியக பகுதிகளிலும் வாழ்ந்துவரும் 400ற்கு மேற்பட்ட மக்களும் 170 மாணவர்களும் இப்போட்டிகளில் பங்குபற்றியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin