திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவியும் நாட்டிய கலாவித்தகர் ஸ்ரீமதி சுதர்சினி கரன்சன் அவர்களின் மாணவியுமான செல்வி நியோமி வெலிஜியா வில்சன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
அழகியல் கல்லூரி உபஅதிபர் அருட்தந்தை அன்புராசா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரவெட்டி குருசேத்திரம் நடனாலய இயக்குநர் செல்வி பேரின்பநாயகி சிவகுரு அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
செல்வி நியோமி வெலிஜியா வில்சன் அவர்கள் கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடனக்கலையை பயின்று அரங்கேற்றத்தை மேற்கொள்கின்ற எட்டாவது மாணவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

By admin