சில்லாலை றோ.க.த.க பாடசாலை அதிபர் திருமதி யுஸ்ரர் மரியகொறற்றி பியன்வெனு அவர்களின் சேவையை கௌரவித்து முன்னெடுக்கப்ட்ட மணிவிழா நிகழ்வு 5ஆம் திகதி புதன்கிழமை பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
 
பாடசாலை சமுகத்தினரின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். வலயக்கல்வி பணிப்பாளர் ரவிச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு அதிபர் அவர்களிற்கு சில்லைச்சிற்பி என்னும் நாமம் சூட்டிவைத்தார்.
 
தொடர்ந்தது சில்லைச்சிற்பி மலர் வெளியீட்டு நிகழ்வும் அதிபருக்கான கௌரவிப்பும், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் கோட்டக்கல்வி பணிப்பாளர், கல்வித்திணைக்கள மேல்நிலை உத்தியோகத்தர், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin