சலேசியன் அருட்சகோதரிகளால் நிர்வகிக்கப்படும் யாழ். ஆக்சிலியம் முன்பள்ளி சிறார்களின் சந்தை நிகழ்வு 12ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

சிறார்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கபட்ட இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களும் டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலை இயக்குநர் அருட்தந்தை டிக்சன் பெர்னான்டோ அவர்களும் கௌரவ விருந்தினர்களாக யாழ். திருக்குடும்ப முன்பள்ளி அதிபர் அருட்சகோதரி தயாளசீலி, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சரண்யா, சமுக வைத்திய அதிகாரி தர்சினி, அகில இலங்கை சமாதான நீதவான் திரு. செபஸ்ரியன் நேரு மற்றும் உயர் தொழிநுட்ப கல்லூரி இயக்குனர் திரு. வண்ணராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் பொதுமக்கள் மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்து பிள்ளைகளை உற்சாகப்படுத்தினர்.

By admin