யாழ்ப்பாணம் பல்கலைகழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் ‘சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்’என்ற தலைப்பில் நடைபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் இரண்டாம் உரை 01.09.2021 புதன்கிழமை பிற்பகல் 7.00 மணிக்கு நடைபெற்றது. ‘தமிழ் கிறிஸ்தவ இறை அனுபவ வளர்ச்சி’ என்ற தலைப்பில் அருட்திரு எஸ்.ஜே. இம்மானுவேல் அவர்கள் தமது உரையை நிகழ்த்தினார்.


இவர் தனது உரையில் இலங்கையில் கிறிஸ்தவத்தின் அரம்ப நிலைகளையும் அதன் வளர்ச்சிகளையும் எடுத்துக்காட்டி தற்காலத்தில் எவ்வாறு கிறிஸ்தவம் தமிழ் கிறிஸ்தவமாக மாறவேண்டும் என்கின்ற சிந்தனையையும் வழங்கினார்.
கிறிஸ்தவத்தின் சாரம்சத்தை தமிழ் உலகிற்குள் உள்வாங்கி, தமிழ்க் கிறிஸ்தவர்கள் தமது வாழ்விலும், பணியிலும் இதனை இணைத்துக்கொண்டு இனம் மொழி கலை கலாச்சாரம் சமூக அரசியல் ஆகிய தளங்களில் இதனை வாழ வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
மெய்நிகர் வழியில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், குருக்கள், துறவிகளென இலங்கையிலும் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இணைந்திருந்தார்கள்.

By admin