குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்த நாள் வழிபாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்நாள்களை சிறப்பிக்குமுகமாக முன்னெடுக்கப்பட்ட சந்தியோகுமையோர் அம்மானை பாடி காட்சிப்படுத்தும் நிகழ்வு 21ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது.
 
ஆயத்த நாள் வழிபாட்டின் பின் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் ஆலய முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சந்தியோகுமையோர் அம்மானை பாடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சந்தியோகுமையோர் அம்மானை பாடலை அருட்தந்தை ஜெயசீலன் அவர்களும் காட்சிப்படுத்தலை ஆசிரியர் பிரபா இக்னேசியஸ் அவர்களும் நெறிப்படுத்த புனித யோசப்வாஸ் இளையோர் மன்றத்தினர் ஆற்றுகை செய்திருந்தனர்.
 
அம்மானை எழுதப்பட்டு 350 வருடங்களின் பின் முதல் தடவையாக பொதுவெளியில் பாடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது இதுவே முதல் தடவையாக அமைந்துள்ளதுடன் இந்நிகழ்வு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

By admin