யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியினரால் முன்னெடுக்கப்ட்ட புனித பிரான்சிஸ்கு சவேரியார் திருவிழா 03ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்விழாவில் திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். தொடர்ந்து மாலை நிகழ்வாக விளையாட்டு நிகழ்வுகள் குருத்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றதுடன் இந்நிகழ்வுகளில் குருக்கள் அருட்சகோதரர்கள் இணைந்து பங்குபற்றினார்கள்.

By admin