‘கொரோனா’ தொற்று உலகை விட்டு நீங்க ஆண்டவரின் அருள் வேண்டி செபிக்கும் விசேட திருப்பலி 24.10.2020 சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

அன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு செபமாலை தியானமும் நற்கருணை ஆராதனையும் அங்கு நடைபெற்றன. யாழ்ப்பாணம் , திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு ஆகிய நான்கு தமிழ் மறைமாவட்டங்களும் இணைந்து வட,கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் இச்சிறப்பு செப நாள் வழிபாடுகள் நான்கு தமிழ் மறைமாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

By admin