2023ஆம் ஆண்டு உரோமையில் நடைபெறவுள்ள 16வது உலக ஆயர்கள் மாமன்றம் பற்றி அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், திரு அவை எவ்வாறு ஒரு கூட்டொருங்கியக்கத் திரு அவையாகப் (Synodal Church) பயணிப்பது என்பதை தேர்ந்து தெளிதலே இம் மாமன்றத்தின் நோக்கமெனத் தெரிவித்துள்ளார்.வருகிற ஒக்டோபர் மாதம் 10ம் திகதி வத்திக்கானில் திருத்தந்தை அவர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்படவிருக்கும் ஆயர்கள் மாமன்றத்தின் தயாரிப்புப் பணிகள் எல்லா நாடுகளிலுமுள்ள அனைத்து மறைமாவட்டங்களிலும் வருகிற ஒக்டோபர் 17ம் திகதி மறைமாவட்ட ஆயர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும்.

இவ் ஆயர்கள் மாமன்றத்திற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவியாக ஒரு தயாரிப்பு ஏட்டையும் வத்திக்கான் வெளியிட்டுள்ளது. திருமுழுக்குப் பெற்ற அனைவரும் இவ் ஆயத்தப்பணிகளில் பங்கேற்கவேண்டுமென திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.

By admin