குளமங்கால் பங்கில் வணக்கமாத சிறப்பு நிகழ்வாக முன்னெடுப்பட்ட செபமாலைப் பேரணி 31ஆம் திகதி கடந்த புதன்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.
வணக்க மாதம் முழுவதும் பங்கில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் மாதா சொருபம் எடுத்துச் செல்லப்பட்டு செபமாலை செபிக்கப்பட்டது. தொடர்ந்து வணக்கமாதத்தின் இறுதி நாளில் பங்கிலுள்ள நான்கு ஆலயங்களிலிருந்தும் செபமாலைப் பேரணி ஆரம்பமாகி மல்லாகம் புனித சதாசகாய அன்னை ஆலயத்தை சென்றடைந்து புனித கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளை சந்தித்த பெருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருநாள் திருப்பலியை அருட்தந்தை சுமன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுக்கொடுத்தார். செபமாலை பேரணியிலும் தொடர்ந்து நடைபெற்ற திருப்பலியிலும் பங்கு மக்கள் அனைவரும் பக்தியோடு பங்குகொண்டதுடன் திருப்பலி நிறைவில் தோழமை விருந்து பரிமாறப்பட்டது.
  

By admin