தேசிய மறைக்கல்வி வாரத்தை முன்னிட்டு குளமங்கால் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி வார சிறப்பு நிகழ்வுகள் கடந்த வாரம் அங்கு நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் கடந்த 17ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை நடைபெற்ற இந்நிகழ்வுகளில் மறைக்கல்வி மாணவர்களுடன் இணைந்த இல்ல தரிசிப்புக்கள், நோயாளர் தரிசிப்புக்கள், சிறப்பு வழிபாடுகள், சிரமதானம், மரநடுகை, தேவையில் உள்ளவர்களுக்கு உலர் உணவு வழங்கல் போன்ற நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
இறுதி நாளாகிய 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைக்கல்விவார சிறப்பு நிகழ்வுகள் இங்கு இடம்பெற்றன.காலை திருப்பலியும் தொடர்ந்து மாலை விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் காலை திருப்பலியை அருட்தந்தை சுதர்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
மாலை மறைக்கல்வி மாணவர்களுக்கான இல்ல விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன. இப்போட்டிகளில் 150 வரையான மாணவர்களும் அவர்களோடு இணைந்து மறையாசிரியர்கள், பெற்றோர், பங்குமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

By admin