குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூதுப் பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயருடன் இணைந்து ஒப்புக்கொடுத்தார். 24ஆம் திகதி நற்கருணைவிழா திருப்பலி அமலமரித் தியாகிகள் சபையின் மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திருநாள் திருப்பலி நிறைவில் இலங்கைக்கான திருத்தூதுப் பிரதிநிதி பேரருட்தந்தை பிறைன் உடேக்குவே அவர்களுக்கான கௌரவிப்பும் நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.
மேலும் அன்று மாலை புனிதரின் திருச்சொருப தேர்ப்பவனியும் ஆசீர்வாதமும் அங்கு இடம்பெற்றன.