குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நற்கருணை சிற்றாலயம் அமைக்கப்பட்டதன் பத்தாவது ஆண்டு நிறைவு விழா உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 22ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாலை திருச்செபமாலையுடன் வழிபாடுகள் ஆரம்பமாகி திருவுளப்பணியாளர் சபையை சேர்ந்த அருட்தந்தை சணா அவர்களின் தலைமையில் நற்கருணை வழிபாடு இடம்பெற்று வெளிவீதியூடாக நற்கருணை பவனியாக எடுத்துவரப்பட்டது.
இப்பவனியில் ஏராளமான இறைமக்கள் பங்குபற்றியதுடன் பவனியின் நிறைவில் யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களால் நற்கருணை ஆசீர்வாதமும் வழங்கப்பட்டது.

By admin