தற்போது நாம் வளர்ந்துவிட்டதால் அவ் வாக்குறுதியை நாமே மேற்கொள்கின்றோம். தூய ஆவியாரால் முத்திரையிடப்பட்டு நாம் கிறிஸ்துவிற்கு சாட்சியம்பகர தற்போது அழைக்கப்படுகின்றோம். எனவே எம்மீது பொழியப்படும் தூய ஆவிக்கு பிரமாணிக்கமாய் வாழ உறுதி கொள்வோம் எனக் கூறினார். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிக எளிமையாக நேர்த்தியாகவும் பங்குத்தந்தை யாவீஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப் பங்குத்தந்தையர்கள் மற்றும் மறையாசிரியர்களின் உதவியுடன் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

இலங்கை, யாழ். குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 06.08.2021 வெள்ளிக்கிழமை யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. கடந்த வருட இறுதியிலிருந்து உறுதிப்பூசுதலுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்த 107 பிள்ளைகள் இவ்அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள். அருட்சாதனத் திருப்பலியில் மறையுரையாற்றிய ஆயர், நாம் குழந்தைகளாக இருந்தவேளை எமக்காக இறைவன் முன்னிலையில் எமது விசுவாச வாழ்விற்கான வாக்குறுதியை எமது ஞானப்பெற்றோர் வழங்கினர்.

By admin