கிளிநொச்சி மறைக்கோட்டத்திலுள்ள குமிழமுனை புனித அந்தோனியார் ஆலய நூற்றாண்டு விழாவை சிறப்பித்து முன்னெடுக்கப்பட்ட வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிதர்சன் அவர்களின் தலைமையில் 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 05ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
 
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றதுடன் ஆலயம் அமைக்கப்பட்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு “பாதுகாவலரின் பாதச்சுவடுகளைத் தேடி” என்னும் நினைவுமலர் வெளியீடும் நடைபெற்றது.
 
திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக அன்று மாலை கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பங்குமக்களால் “புனித அந்தோனியார்”நாட்டுக்கூத்தும் மேடையேற்றப்பட்டது.

By admin