305.08.2018 லிருந்து 11.08.2018 வரையிலான காலப்பகுதியில், வருகின்ற ஆண்டு நடாத்தப்படவிருக்கும் மறையாசிரியர்களுக்கான மூன்று (3) மாத வதிவிடப் பயிற்சிக்கு தோற்றவிருக்கும் மறை ஆசிரியர்களின் தகமையை உயர்த்தும் நோக்குடன், துரிதபயிற்சி (Foundation Course) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்தில், நடாத்தப்பட்டது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மறைக்கோட்டங்களைச் சேர்ந்த பங்குகளிலிருந்து  (25) மறையாசிரியர்கள் இதில் கலந்துகொண்டார்கள்.

இவர்களுக்கு திருவிவிலியம், திருவழிபாடு, திருஅவை, திருவருட்சாதனங்கள், கத்தோலிக்க திருமறையின் அடிப்படைக் கொள்கைகள் பற்றிய பகுதிகளில் துரிதபாடங்கள் நடாத்தப்பட்டன. அத்துடன் மறையாசிரியர்களுக்கான தியானம், வழிபாடு, கலைவழி மறைக்கல்வி, குழுமவாழ்வு பற்றியபயிற்சிகளும் வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணம் மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்பணி பெனற் அவர்களின் நெறிப்படுத்தலில், முல்லைதீவு, புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலய அதிபர் அருட்பணி அ. றொபின்சன், பாடசாலை சமூகத்தினர் புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி சுதர்சன், பங்குமக்கள் ஆகியோரின் தாராள ஒத்துழைப்புடன் இந்நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.2 5 9 8 7 11 6

By admin