8

கிளிநொச்சி மறைக்கோட்ட மட்டத்தில் பங்குகளுக்கிடையிலான இளையோருக்கான விளையாட்டு நிகழ்வுகள் 10. 6. 2017 அன்று கிளிநொச்சி திரேசாள் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்த்தந்தை பேனாட் றெக்னோ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார் . இதை மறைக்கோட்ட இளையோருக்கான இணைப்பாளர் அருட்தந்தை குயின்சன் பெர்னான்டோ அவர்கள் நெறிப்படுத்தினார். இன் நிகழ்விற்கு மறைக்கோட்ட பங்குத்தந்தையர்களும் கலந்து சிறப்பித்ததோடு இவ் நிகழ்வானது சிறப்பாக நிறைவேறுவதற்கு பல வழிகளிலும் ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள்.

இதில் 8 பங்குகள் கலந்துகொண்டன. ஆண்களுக்கான துடுப்பாட்டத்தில் கிளிநொச்சி பங்கு முதல் இடத்தையும், வட்டக்கச்சி பங்கு இரண்டாம் இடங்களையும் பெற்று மறைமாவட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.
பெண்களுக்கான கிளித்தட்டுப் போட்டியில் முழங்காவில் பங்கு முதல் இடத்தையும், வட்டக்கச்சி பங்கு இரண்டாம் இடத்தையும் பெற்று மறைமாவட்ட போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன.
கயிறு இழுத்தல் போட்டிகளில் ஆண்கள் அணியில் குமுழமுனைப் பங்கும், பெண்கள் அணியில் பரந்தன் பங்கும் தகுதிபெற்றுள்ளன.
இறுதியில் பரிசில்கள் வழங்கும் நிகழ்வுடன் இவ் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.

11 3 4 6 2 1 9 1213 14 15

By admin