கிளிநொச்சி மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான சிறப்பு நிகழ்வு 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பூநகரி பள்ளிக்குடா அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோர் இணைப்பாளர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலைதிருப்பலியும் நிறைவில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.
தொடர்ந்து கிளிநொச்சி மறைக்கோட்ட நிர்வாக உறுப்பினர்களுக்கும் பூநகரி பங்கு இளையோர்களுக்குமான ஒன்றுகூடல் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கருத்துரைகளும் குழுவிளையாட்டுக்களும் நடைபெற்றதுடன் கிளிநொச்சி மறைக்கோட்ட நிர்வாக கூட்டமும் இடம்பெற்றது.
அத்துடன் இளையோரால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான பணியில் பள்ளிக்குடா கடற்கரை பிரதேசம் துப்பரவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் 30க்கும் அதிகமான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin