கிளிநொச்சி பங்கில் உள்ள இளையோர்களுக்கான ஓன்றுகூடல் 06ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது.

இவ் ஓன்றுகூடலில் கிளிநொச்சி பங்கில் உள்ள 6 ஆலயங்களையும் சேர்ந்த 45 இளையோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உருத்திரபுர பங்குதந்தை அருட்திரு போல் அனக்கிளிற் அவர்கள் கலந்து சிறப்புரை ஆற்றினார். இவ் ஓன்றுகூடலில் கலந்து கொண்ட இளையோர் குழுக்களாக இணைந்து மதிய உணவை தயாரிக்கும் நிகழ்வுடன் 2022ம் ஆண்டிற்கான பங்கு இளையோர் ஓன்றியத்தின் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. இந் நிகழ்வுகள் கிளிநொச்சி பங்குதந்தை அருட்திரு யேசுதாசன் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

By admin