கிறிஸ்மஸ் என்பது ஈகையின் காலம், இதனை பகிர்வின் உணர்வோடு அர்த்தமுள்ள மகிழ்வின் பண்டிகையாக்குவோம் என யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள திருவருகைக்கால சுற்றுமடலில் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சுற்றுமடலில் அவர் தற்காலத்தில் எம்பிரதேசத்திலும் நாட்டிலும் நிலவிவரும் நிகழ்வுகளை சுட்டிக்காட்டி போதை என்னும் வாதையிலிருந்து எம் சமுகத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும், நீதியான தேர்தல்களின மூலம் பொருளாதார நெருக்கடியற்ற நிலையான அமைதி அன்பு எதிர்நோக்கு கொண்ட சூழல் உருவாக்கப்படவேண்டியதன் முக்கியத்துவத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்
.