உலகில் பரவி வரும் கொரோணா தொற்றுநோய் நீங்க யாழ். கிறிஸ்தவ திருச்சபைகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கூட்டு ஆராதனை 01.10.2021 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணிக்கு யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டு ஆராதனையில் யாழ். மறைமாவட்டக் குருக்கள், ஏனைய கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள், இறைமக்கள், இராணுவத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

இச்சிறப்பு ஆராதனை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களின் இறுதி ஆசீரோடு நிறைவுபெற்றது. அருட்திரு. தயாபரன் அவர்களும், திரு. கந்தசாமி கருணாகரன் அவர்களும் இணைந்து நெறிப்படுத்தியிருந்த இந்நிகழ்வு யாழ் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் அனுசரனையில் நடைபெற்றது.

By admin