யாழ் மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடாத்தப்படும் ஆயர் தியோகுப்பிள்ளை அவர்களின் நினைவுப் பேருரை கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. “கிறிஸ்தவப் பின் நவீனத்துவம் – ஒரு சமகாலப் பார்வை” எனும் தலைப்பில் இவ்வருடத்திற்கான நினைவுப் பேருரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரீகத்துறை தலைவரும், முதுநிலை விரிவுரையாளருமான அருட்திரு போல் றொகான் அவர்கள் நிகழ்த்தியிருந்;தார். குருக்கள் ஒன்றியத்தலைவர் அருட்திரு பெனற் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தார். நேரடியாகவும் சூம் செயலியூடாக நிகழ்நிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் குருக்கள் துறவிகள் பல்கலைக்கழக மாணவர்களென பலரும் கலந்து பயனடைந்தார்கள்.

By admin