கா.போ.தா சாதாரண தர பரீட்சை பெறுபோறுகள் கடந்த வியாழக்கிழமை வெளிவந்துள்ள நிலையில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் பரிட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 94 வீதமானவர்கள் சித்தியடைந்து சிறப்பான பெறுபேறுகளை பெற்றுள்ளனர். இவர்களில் மூவர் ஒன்பது பாடங்களிலும் ஐவர் சங்கீதபாடம் தவிர்து எட்டுப்பாடங்களிலும் இருவர் ஏழு பாடங்களிலும் அறுவர் ஐந்து பாடங்களிலும் அதிதிறமை சித்திகளை பெற்றுள்ளனர்.

அத்துடன் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் பரிட்சைக்கு தேற்றிய மாணவர்களில் 60 விதமானவர்கள் சித்தியடைந்துள்ளனர். மேலும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் இரண்டு மாணவர்கள் பாடசாலை வரலாற்றில் முதன் முதலில் ஒன்பது பாடங்களிலும் அதிதிறமை சித்திகளை பெற்று அப்பாடசாலைக்கு பெருமைசேர்த்துள்ளார்கள். அங்கு இப்பரிட்சைக்கு தோற்றிய 57 மாணவர்களில் 40 மாணவர்கள் உயர்தர கல்வியைத்தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

By admin