கத்தோலிக்க தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஏற்பாட்டில் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை தயதீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் தலைமைதாங்கி சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலி நிறைவில் புனித மரியன்னை பேராலய இளையோருடன் சிநேக பூர்வ கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
அன்றிரவு இளையோருக்கான சிறப்பு ஒன்று கூடல் இடம்பெற்றது.

By admin