கட்டைக்காடு பங்கில் ஆலய அருட்பணி சபையினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பங்குமக்களுக்கான மகாஞான ஒடுக்கம் கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகி இம் மாதம் 19ஆம் திகதி வரை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் திருப்பலியுடன் ஆரம்பித்துவைத்தார்.
அமலமரித்தியாகிகள் சபை அருட்சகோதரர்கள் மற்றும் மறை உரைஞர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இல்லத் தரிசிப்புக்கள், அன்பிய உருவாக்கம், சிறப்பு வழிபாடுகள், அருட்சாதன கொண்டாட்டங்கள் என்பன இடம்பெற்றதுடன 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்ட திருப்பலியுடன் நிறைவடைந்தது.