கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 24ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

23ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி, திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பவற்றுடன் நற்கருணை வழிபாடும், புனிதரின் திருச்சுருப பவனியும் இடம்பெற்றன. தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலை திருநாள் திருப்பலியும் நடைபெற்றது.

திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். அத்துடன் கச்சதீவு இறங்குதுறையில் அமைக்கப்பட்ட புனித அந்தோனியார் வரவேற்பு திருச்சொருபமும் அருட்தந்தை பத்திநாதன் அவர்களால் 23ஆம் திகதி நேற்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.

இலங்கையிலிருந்து 4000 ற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து இங்கு நடைபெற்ற வழிபாடுகளில் பக்தியுடன் பங்குபற்றினார்கள்.

By admin