யாழ் கிறிஸ்தவ ஓன்றியமும் யாழ் மறைமாவட்ட உரோமன் கத்தோலிக்க ஓன்றிப்புக்கான ஆணைக்குழுவும் இணைந்து நடாத்தும் ஓன்றிப்பு வார வழிபாடுகள் 18ம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 25ம் திகதி செவ்வாய்கிழமை வரை நடைபெறவுள்ளன.

ஓவ்வொரு வருடமும் இவ்வொண்றிப்பு வார நிகழ்வுகள் இக்காலத்தில் முன்னெடுக்கப்படுவதுடன் கிறிஸ்தவ சபைகள் ஒன்றாக இணைந்து பல நிகழ்வுகளை மேற்கொள்ளப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்நிகழ்வுகள் கத்தோலிக்க ஓன்றிப்புக்கான ஆணைக்குழு இயக்குனர் அருட்திரு தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்று வருகின்றது.

By admin