ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 24ம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
நற்கருணைவிழா திருப்பலியை கரம்பொன் மெலிஞ்சிமுனை பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களும் திருவிழா திருப்பலியை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை யாத்திரைத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் திருவிழாவை முன்னிட்டு ஊர்காவற்றுறை புனித யோசப்வாஸ் இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட புனிதர்களின் வேடம் ஏற்றல் போட்டி நடைபெற்றதுடன் நவநாட்கால மறையுரைகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற எழுத்துப் பரீட்சை, கட்டுரைப் போட்டி மற்றும் வேடம் தரிப்பு போட்டி ஆகியவற்றில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றன.