யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஏற்பாட்டில் ஆசிய பசுபிக் பாடசாலைகள் உளவியல் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான உளவியல் மாநாடு கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்லூரி மத்தியுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 30 வரையான பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள் என்பனவற்றினுடாக மாணவர்களையும் ஆசிரியர்களையும் நெறிப்படுத்தியிருந்தனர்.

இந்நிகழ்வின் இறுதியில், பங்குபற்றிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் யாழ். கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளை சேர்ந்த 250 வரையான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin