முல்லைத்தீவுப் பங்கிலுள்ள கார்லோ இளையோர் ஒன்றியத்தினர் உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.

காலையில் படகோட்டப் போட்டியும் மாலையில் கிராமிய விளையாட்டுக்களுடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. மாலை நிகழ்வுகள் முல்லைத்தீவு கப்பலேந்தி மாதா ஆலய முன்றலில் நடைபெற்றன. தொடர்ந்து பரிசில் வழங்கல் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் குருக்கள் துறவியர்கள் பங்குமக்களென பலரும் கலந்து சிறப்பித்தனர். அன்று காலை நடைபெற்ற படகோட்டப்போட்டியில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.

By admin