இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவுநாள் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை பல இடங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கபட்டது.
யாழ் மறைமாவட்டத்தில் மறைமாவட்ட குருமதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. 1வது குண்டுத்தாக்குதல் நடைபெற்ற காலை 8.42 மணிக்கு பேராலய மணிகள் ஒலிக்கவிடப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கபட்டன.
பேராலய முன்றலில் பிரத்தியேகமாக அமைக்கபட்ட இடத்தில் கியூடெக் கரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருட்தந்தை யூயின் பிரான்சிஸ் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிவைக்க வழிபாடுகள் இடம்பெற்றன.
வழிபாட்டை தொடர்ந்து எரியும் மெழுகுவர்த்திகளை தாங்கிய வண்ணம் குருக்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள் அனைவரும் பவனியாக பேராலயத்திற்குள் சென்று உயிர்த ஆண்டவர் திருச்சுருவத்திற்கு முன்னால் மெழுகுவர்த்திகளை நாட்டி அஞ்சலி செலுத்தினார்கள்.

By admin