யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய செயற்குழுக்கூட்டம் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைநதி கத்தோலிக்க ஊடக மைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட இளையோர் அணைக்குழு இயக்குனர் அருட்திரு அன்ரன் ஸ்ரீபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட இளையோர் ஒன்றியத் தலைவர் திரு. எமிலியன் குருசோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இவ்வருடத்தின் ஆறு மாத காலப்பகுதிக்கான செற்பாடுகள் திட்டமிடப்பட்டன. அத்துடன் புனித வின்சன் டி போல் இளையோர் பந்திகளை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் மறைமாவட்ட புனித புனித வின்சன் டி போல் உறுப்பினர் ஒருவரும் முழங்காவில் பிரதேசத்தில் பணியாற்றிவரும் சலேசியன் சபையை சேர்ந்த அருட்சகோதரன் மரியான் அவர்களும் இணைந்திருந்தனர். அத்துடன் கிளிநொச்சி புனித திரேசாள் ஆலய இளையோர்களுக்கான வருடாந்த ஒன்று கூடலும், புதிய நிர்வாகத்தெரிவும் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித திரேசாள் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்திரு ஜேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சலேசியன் சபையை சேர்ந்த அருட்திரு அசோக் அவர்கள் வளவாளராக கலந்து இளையோரை வலுப்படுத்தி கருத்துரையை வழங்கினார்.

By admin