யாழ். திருமறைக்கலாமன்றமும் அமல மரித்தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கு மான பணியகமும் இணைந்து முன்னெடுத்த இளையோருக்கான முழுநாள் பயிற்சிப் பட்டறை 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் அமைந்துள்ள அமலமரித் தியாகிகள் சபையின் ‘ஒப்ரெக்’ நிறுவனத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சிப் பட்டறையில் கிளிநொச்சித் திருமறைக் கலாமன்றத்தின் இளையோர்களுடன், வட்டக்கச்சி, தர்மபுரம், உடையார்கட்டு பங்குகளைச் சேர்ந்த இளையோர்கள் 100 பேர்வரை கலந்து பயனடைந்தார்கள். இப்பயிற்சிப் பட்டறையில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியக இயக்குனர் அருட்திரு றமேஸ் அவர்களுடன் திருமறைக்கலாமன்ற நிர்வாக இயக்குனர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அவர்களும் மற்றும் வட்டக்கச்சி பங்குதந்தை அருட்திரு சுதர்சன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் திருமறைக்கலாமன்றத்தை சேர்ந்த அன்று யூலியஸ், மற்றும் கரன்சன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து நிகழ்வுகளை மேற்கொண்டார்கள்.

By admin