சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகமும் திருமறைக்கலா மன்றமும் இணைந்து நடாத்திய இளையோருக்கான பயிற்சிப்பட்டறை கடந்த 18ம் திகதி திங்கட்கிழமை றக்கா வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலா முற்றத்தில் நடைபெற்றது.

காலை 9மணி தொடக்கம் மாலை 3.30 மணிவரை நடைபெற்ற இப்பயிற்சியில் ஆளுமை விருத்தி, தலைமைத்துவப் பண்பு, ஊடக அறிமுகம் ஆகியவை பற்றிய உரைகளுடன் குழுச்செயற்பாடுகளும் இடம் பெற்றன.
இந்நிகழ்வில் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியக இயக்குனர் அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்திரு றமேஸ் அவர்களும் திருமறைக் கலா மன்றத்தின் பிரதி இயக்குனர் திரு யோன்சன் ராஜ்குமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இன் நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை உளவள துணையாளர் திரு நவராஜ் அவர்களும் யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க ஊடக இயக்குனர் அருட்திரு அன்ரன் ஸ்ரீபன் அவர்களும் வளவாளராக வருகை தந்து இளையோரை வழப்படுத்தி இருந்தனர். கோவிட்19 சுகாதார விதிமுறைக்கு அமைவாக நடைபெற்ற இந் நிகழ்வில் 30 வரையான இளையோர் கலந்து பயனடைந்து கொண்டனர்.

By admin