இளவாலை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முன்பள்ளி சிறார்களுக்கான விளையாட்டு நிகழ்வு 22ஆம் திகதி சனிக்கிழமை இளவாலை புனித அன்னாள் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
 
முன்பள்ளி ஆசிரியர் சங்க இயக்குநர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் வழிநடத்தலில் ஆலோசகர் அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தலைவி திருமதி மடோனா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 10 முன்பள்ளி சிறார்களை இணைத்து விளையாட்டு நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தார்கள்.
 
மதவேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலை உளநல வைத்திய நிபுனர் திரு.சிவதாசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

By admin