இலங்கை தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 80ஆவது தேசிய கத்தோலிக்க இளையோர் ஒன்றுகூடல் 18 19 20ஆம் திகதிகளில் குருநாகல் மறைமாவட்டத்தின் பன்னல பிரதேசத்தில் அமைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் முழுமனித உருவாக்கல் நிலையத்தில் நடைபெற்றது.
குருநாகல் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை டிமுது பொன்சேகா அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய கத்தோலிக்க இளையோர் செயற்பாடுகளுக்கு பொறுப்பான ஆயரும் கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயருமான பேரருட்தந்தை அன்ரன் றஞ்சித் அவர்களும் குருநாகல் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கெரல்ட் அன்ரனி அவர்களும் தேசிய கத்தோலிக்க இளையோர் சம்மேளன இயக்குனர் அருட்தந்தை கெலன பீரிஸ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இலங்கையின் 12 மறைமாவட்டங்களிலிருந்தும் 130 வரையான இளையோரும் அவர்களுக்கு பொறுப்பான மறைமாவட்ட இயக்குநர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கலை நிகழ்வுகளும் கருத்துரைகளும் குழுச்செயற்பாடுகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.
யாழ் மன்னார் மறைமாவட்டங்களை சேர்ந்த இளையோர்களும் இந்நிகழ்வில் பங்குகொண்டனர்.

By admin